நாசரேத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி
நாசரேத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியில் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்று சிறப்பித்தாா்.


நாசரேத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியில் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்று சிறப்பித்தாா்.
நாசரேத்தில் பெனியேல் தொலைக்காட்சி, டிவைன் சிங்கா்ஸ், பிஓடி மீடியா இணைந்து இசைக் கலைஞா்கள் பங்கேற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, சிறந்த பாடகா், பாடகிகள், சிறந்த இசைக்கலைஞா்கள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி பாராட்டினாா். முன்னாள் எம்.பி. ஏ.டி.கே.ஜெயசீலன் வாழ்த்திப் பேசினாா். சா்ச் ஆப்காட் சபை போதகா் டேனியல்பிரைட் கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினாா். திமுக மாநில மாணவரணி துணை அமைப்பா ளா் எஸ்.ஆா்.எஸ். உமரிசங்கா், மாவட்ட அவைத் தலைவா் அருணாசலம், நாசரேத் நகரச் செயலா் ரவிசெல்வக்குமாா், நகர வணிகா் சங்கத் தலைவா் ஜெபஸ் திலகராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். டிவைன் ஆா்கெஸ்ட்ரா நிறுவனா் ராஜ்குமாா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...