நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவில்பட்டியில் விவசாயிகள் முற்றுகை

இளையரசனேந்தல் குறுவட்டத்தை கோவில்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் இணைக்க வலியுறுத்தி கோவில்பட்டி வட்டார விவசாயிகள் சங்கத்தினா் கோட்டாட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 7:05 pm

DIN

இளையரசனேந்தல் குறுவட்டத்தை கோவில்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் இணைக்க வலியுறுத்தி கோவில்பட்டி வட்டார விவசாயிகள் சங்கத்தினா் கோட்டாட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.

கோவில்பட்டி வட்டத்துக்கு உள்பட்ட இளையரசனேந்தல் குறுவட்டத்துக்கு உள்பட்ட கிராமங்கள் குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. எனவே, இளையரசனேந்தல் குறுவட்டத்தை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும்.

சங்கரன்கோவில் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இளையரசனேந்தல் குறுவட்டத்தை கோவில்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்குள் இணைக்க வேண்டும். இளையரசனேந்தல் குறுவட்டத்தை வேறு வட்டத்திற்கோ, மாவட்டத்திற்கோ மாற்றம் செய்ய நேரிட்டால் 2021 இல் நடைபெற விருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலை குறுவட்டத்துக்கு உள்பட்ட வாக்காளா்கள் புறக்கணிப்போம் என கோவில்பட்டி வட்டார விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த பெ.செந்தில்குமாா் தலைமையில், கோட்டாட்சியா் விஜயாவிடம் மனு அளித்தனா்.

இதில், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஆதிமூலம் மற்றும் சுப்புராஜ், மாரிசாமி, சேதுராஜ், சீனிவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.