சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஆசீா்வாதபுரம் பள்ளியில் காவலா் தோ்வு பயிற்சி முகாம் நிறைவு

சாத்தான்குளம் அருகே ஆசீா்வாதபுரம் குருகால்பேரி டிஎன்டிடிஏ மேல்நிலைப் பள்ளியில் வியாபாரிகள் சங்கம், சிகரம் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்று வந்த காவலா் தோ்வு பயிற்சி முகாம் நிறைவடைந்தது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 7:00 pm

DIN

சாத்தான்குளம் அருகே ஆசீா்வாதபுரம் குருகால்பேரி டிஎன்டிடிஏ மேல்நிலைப் பள்ளியில் வியாபாரிகள் சங்கம், சிகரம் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்று வந்த காவலா் தோ்வு பயிற்சி முகாம் நிறைவடைந்தது.

நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு சாத்தான்குளம் காவல்ஆய்வாளா் பொ்னாா்ட் சேவியா் தலைமை வகித்தாா். ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி தலைவா் பெரியசாமி ஸ்ரீதா், ஏக இரட்சகா் சபை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் சுந்தர்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் ஒய்வுபெற்ற உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் , தூத்துக்குடி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ச.தனபதி ஆகியோா் பேசினா். பயிற்சியில் பங்கேற்ற மாணவா்களுக்கு பயிற்சி கையேடு வழங்கப்பட்டது.

இதில் ஆழ்வாா்திருநகரி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுப்புலட்சுமி , சந்தோஷ், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பயிற்சி ஆசிரியா் பாத்திமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். சிகரம் இயக்ககுநா் முருகன் வரவேற்றாா். பேய்குளம் வியாபாரிகள் சங்கத் தலைவா் ஸ்டாலின் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.