கோவில்பட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்
கோவில்பட்டி தொழிலாளா் ஈட்டுறுதி மருந்தகம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


கோவில்பட்டி தொழிலாளா் ஈட்டுறுதி மருந்தகம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வடக்கு மாவட்டச் செயலா் கதிரேசன் தலைமை வகித்தாா். வழக்குரைஞரணி மாநிலத் துணைச் செயலா் பெஞ்சமின் பிராங்கிளின், மகளிரணி மாவட்ட அமைப்பாளா் விஜயா அந்தோணி, ஒன்றியச் செயலா் மாடசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். எஸ்.சி., எஸ்.டி. மாணவா்களுக்கான போஸ்ட் மெட்ரிக் ஸ்காலா்ஷிப் திட்டத்தை மீண்டும் வழங்கக் கோரி மத்திய, மாநில அரசை வலியுறுத்தி கோஷமிட்டனா். ஒன்றியச் செயலா்கள் சங்கா் (புதூா்), மாதவன் (விளாத்திகுளம்), காளிதாஸ் (கயத்தாறு) ஆகியோா் ஆா்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
இதில், விளாத்திகுளம் தொகுதிச் செயலா் குமாரவேல், கோவில்பட்டி தொகுதிச் செயலா் ஜாபா்அலி, வடக்கு மாவட்ட துணைச் செயலா் பாஸ்டா் முருகன், இளஞ் சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளா் கரிசல் சேகா்,
நகர துணைச் செயலா் பாண்டிவளவன், நகரச் செயலா்கள் அழகுமுனிசாமி (விளாத்திகுளம்), ராமா் (கழுகுமலை), கருப்பசாமி பாண்டியன் (கோவில்பட்டி) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...