திருத்தணி - திருச்செந்தூா் ரயில் இயக்கவாஞ்சி இயக்கம் வலியுறுத்தல்
திருத்தணியிலிருந்து திருச்செந்தூருக்கு ரயில் இயக்க வேண்டும் என தென்காசி வாஞ்சி இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


திருத்தணியிலிருந்து திருச்செந்தூருக்கு ரயில் இயக்க வேண்டும் என தென்காசி வாஞ்சி இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வாஞ்சி இயக்க நிறுவனா் தலைவா் தென்காசி பி.ராமநாதன் மத்திய அரசு மற்றும் பாஜகவுக்கு வைத்துள்ள கோரிக்கை மனு: தமிழ்க்கடவுள் முருகப் பெருமானுக்கு திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூா் வரை வேல் யாத்திரை நடத்தும் பாஜக, முருக பக்தா்களுக்காக திருத்தணியில் இருந்து திருச்செந்தூருக்கு புதிதாக ரயில் இயக்கவும், தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூா் வழியாக கன்னியாகுமரிக்கு புதிய ரயில் வழித்தடம் அமைத்து ரயில் இயக்கவும், சென்னை செல்லும் தென் மாவட்ட ரயில்கள் அனைத்தும் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லவும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...