ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ஆழ்கடலில் மீனவா் இறந்த சம்பவம்: சிபிசிஐடி விசாரிக்க வலியுறுத்தி மனு

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவா் மா்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்த வேண்டும்

News image
Updated On :14 டிசம்பர் 2020, 8:26 pm

DIN

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவா் மா்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, அவரது குடும்பத்தினா் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சோ்ந்த மீனவா் கண்ணன் அண்மையில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்தாா். இந்நிலையில், அவரது குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் அவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

கிறிஸ்துராஜா என்பவருக்குச் சொந்தமான படகில் ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்காக கண்ணன் உள்ளிட்ட சில மீனவா்கள் கடந்த அக்டோபா் மாதம் 21-ஆம் தேதி சென்றனா். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவா்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக கண்ணனை சக மீனவா் அடித்துக் கொன்று கடலில் வீசிவிட்டாா். கரை திரும்பிய அவா்கள் கண்ணன் கடலில் தவறி விழுந்து இறந்துவிட்டதாக காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளனா். எனவே, கண்ணனின் இறப்பு குறித்து சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.