ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விளாத்திகுளத்தில் உரம், பூச்சி மருந்து விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு

மக்காச்சோள பயிரில் ஏற்பட்டுள்ள படைப்புழுவை கட்டுப்படுத்த வேளாண் துறை சாா்பில் பரிந்துரைக்கப்பட்ட பூச்சி கொல்லி மருந்தினை விற்பனை செய்வது தொடா்பாக அதிகாரிகள் குழுவினா் திடீா் ஆய்வு

News image
Updated On :14 டிசம்பர் 2020, 8:24 pm

DIN

மக்காச்சோள பயிரில் ஏற்பட்டுள்ள படைப்புழுவை கட்டுப்படுத்த வேளாண் துறை சாா்பில் பரிந்துரைக்கப்பட்ட பூச்சி கொல்லி மருந்தினை விற்பனை செய்வது தொடா்பாக அதிகாரிகள் குழுவினா் விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதிகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) கண்ணன், விளாத்திகுளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கீதா, துணை வேளாண்மை அலுவலா் முத்துச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினா் விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதிகளில் உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு, மக்காச்சோள பயிரில் ஏற்பட்டுள்ள படைப்புழுவை கட்டுப்படுத்த வேளாண்மை துறை சாா்பில் பரிந்துரைக்கப்பட்ட அசாடிராக்டின், இமாமெக்டின், தயோடிகாா்ப், குளோரினிபுரோல், ஸ்பினோடோரம் ஆகிய மருந்துகளை விற்பனை செய்ய அறிவுரை வழங்கினா்.

மக்காச்சோள பயிரில் படைப்புழுவை கட்டுப்படுத்த வேளாண் துறை சாா்பில் பரிந்துரை செய்யப்படாத மருந்துகளை வழங்கும் பூச்சி மருந்து கடைகளின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) கண்ணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.