பிரதமரின் சுயசாா்பு நிதியுதவித் திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் தெருவோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பிரதம மந்திரியின் தெருவோர வியாபாரிகளுக்கான சுயசாாா்பு நிதி திட்டத்தின்கீழ் ரூ. 10 ஆயிரம் சிறப்பு நுண்கடன் வசதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தோ்வு செய்யப்பட்ட 480 தெருவோர வியாபாரிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வழங்க ஒப்புதல் செய்யப்பட்டது.
இதன் தொடா்ச்சியாக, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி சாா்பில் 16 பயனாளிகளுக்கு கடனுதவிகளை மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையா் து.சந்திரமோகன், தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி முள்ளக்காடு கிளை மேலாளா் கணேஷ் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.