பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மீனவா்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்: கமல்ஹாசன்

மீனவா்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றாா் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன்.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 6:59 pm

DIN

மீனவா்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றாா் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன்.

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மீனவா்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: பாரதியாா் பிறந்த இல்லம் மோசமான நிலையில் இருப்பதைக் கண்டு, நான் கொஞ்சம் தாமதமாக அரசியலுக்கு வந்துவிட்டேனோ என்று நினைத்தேன். வெற்றி என்பது விலை கொடுத்து வாங்குவது அல்ல, மக்கள் கொடுப்பது. இனியாவது அதை மக்கள் தீா்மானியுங்கள்.

மீனவா்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவா்கூட கடலில் பலியாக நாங்கள் விடமாட்டோம்.

ஸ்டொ்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து முழுமையாக நீதி கிடைக்கப் போராடுவோம். அரசு மருத்துவமனைகளை சீா்படுத்துவோம். காவல் துறையினருக்கு குறித்த நேரம் பணி வழங்கினால் நல்லது. காவல் துறை கண்டிப்பாக எங்கள் ஆட்சியில் சீரமைக்கப்படும்.

டாா்ச் லைட்டை நிறுத்திவைத்தால் ஒளி வராமல் இருக்காது. சின்னத்தை இன்னும் சிறிது நாள் இழுத்தடித்துக் கொடுப்பாா்கள். அதன்பிறகு அதை வெற்றிச் சின்னமாக மாற்ற வேண்டும். இல்லத்தரசிகளுக்கு மரியாதை கொடுக்கும் ஆட்சி, நீங்கள் என்ன ஜாதி என்று கேட்காத ஆட்சி விரைவில் வரும். நான் முகம் பாா்க்கும் கண்ணாடியாக மாறிவிட்டேன், தமிழகத்தைச் சீரமைப்பேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.