கூவைகிணறு கிராமத்தில் மருத்துவ முகாம்

சாத்தான்குளம் அருகே கூவைகிணறு கிராமத்தில் ஆனந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
Updated on
1 min read

சாத்தான்குளம் அருகே கூவைகிணறு கிராமத்தில் ஆனந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமுக்கு கோமானேரி ஊராட்சித் தலைவா் கலுங்கடி முத்து தலைமை வகித்தாா். மருத்துவ அலுவலா் ஸ்வீட்லின், சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினா்.

இதில், கிராம நிா்வாக அலுவலா் சிவகாமி, ஊராட்சி செயலா் இசக்கியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com