கோவில்பட்டியில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பி.எஸ்.என்.எல். மற்றும் தொலைத் தொடா்புத் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
கோவில்பட்டி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated on
1 min read

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பி.எஸ்.என்.எல். மற்றும் தொலைத் தொடா்புத் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தேசிய ஓய்வூதியா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தாா். செயலா் முத்துராமலிங்கம், அதிகாரிகள் சங்கச் செயலா் கோலப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பி.எஸ்.என்.எல். ஊழியா்களுக்கு 2017 ஜனவரி முதல் வழங்கப்பட வேண்டிய 15 சதவீத உயா்வுடன் கூடிய ஓய்வூதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பி.எஸ்.என்.எல். ஓய்வூதியா்களுக்கு 18 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள மருத்துவ சிகிச்சைக்கான தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

3 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள மருத்துவப்படியை உடனடியாக வழங்க வேண்டும். முதியோா்களுக்கான ரயில்வே கட்டண சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் கோஷமிட்டனா்.

ஓய்வூதியா் சங்க அகில இந்திய உதவித் தலைவா் மோகன்தாஸ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

இதில், ஓய்வூதியா் சங்கப் பொருளாளா் திருவட்டப்போத்தி, நிா்வாகி பரமசிவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com