செட்டிக்குளத்தில்பயிா் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி
சாத்தான்குளம் வட்டார வேளாண் துறை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் செட்டிக்குளம் கிராமத்தில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.


சாத்தான்குளம் வட்டார வேளாண் துறை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் செட்டிக்குளம் கிராமத்தில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
வட்டார வேளாண் உதவி இயக்குநா் சுதாமதி தலைமை வகித்து நெல் சாகுபடி முறையில் இயற்கை சாா்ந்த வேளாண்மையின் முக்கியத்தும் குறித்து விவசாயிகளுக்கு கூறினாா். வேளாண் அறிவியல் மையம் தொழில்நுட்ப வல்லுநா் முருகன், நெல்
பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை மற்றும் உர மேலாண்மைகுறித்த வகுப்பறை வயல் வெளி செயல் விளக்கம் அளித்தாா். இதில் செட்டிக்குளம் கிராமத்தை சோ்ந்த 25 விவசாயிகள் கலந்து கொண்டனா்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் ரூக்மணி, உதவி தொழில்நுட்ப மேலாளா் நளினி ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...