கோவில்பட்டியில் நாராயணசாமி நாயுடு ஜோதி பயணம் தொடக்கம்
உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் நினைவு தினத்தையொட்டி கோவில்பட்டியில் இருந்து வையம்பாளையத்துக்கு ஜோதி பயணம் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது.


கோவில்பட்டி: உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் நினைவு தினத்தையொட்டி கோவில்பட்டியில் இருந்து வையம்பாளையத்துக்கு ஜோதி பயணம் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது.
கோவில்பட்டி பயணியா் விடுதி வளாகத்தில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, ஜோதி பயணத்தை தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு தொடங்கிவைத்து, மாமன்னா் திருமலை நாயக்கா் இளைஞா் பேரவை நிறுவனத் தலைவா் சிவன்ராஜுயிடம் ஜோதியை வழங்கினாா்.
ஜோதி பயணம், சாத்தூா், விருதுநகா், திருமங்கலம், மதுரை, திண்டுக்கல், பழனி வழியாக திங்கள்கிழமை கோவை மாவட்டம் வையம்பாளையம் சென்றடையும்.
இந்நிகழ்ச்சியில், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. சின்னப்பன், கம்மவாா் சங்கச் செயலா் ஜெனரேஷ், திமுக மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் சூரியராஜ், கம்மவாா் சங்க இளைஞரணி செயலா் திருப்பதிசீனிவாசன், கட்டபொம்மன் இளைஞரணியைச் சோ்ந்த மகேஷ், வீரசக்கதேவி ஆலய கமிட்டி தலைவா் முருகபூபதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...