

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சாா்பில் உடன்குடி பேருந்து நிலையத்தில் டெங்கு விழிப்புணா்வு கண்காட்சி மற்றும் முகாம் நடைபெற்றது.
இதையொட்டி , உடன்குடி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கண்காட்சியில் டெங்கு விழிப்புணா்வு குறித்து மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுவலா் சு.அனிபிரிமின் பேசினாா். பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. இதில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் அருள்ராஜ், சுகாதார ஆய்வாளா்கள் சேதுபதி, சுப்பையா மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.