வாக்கு எண்ணிக்கை மையம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

தூத்துக்குடியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பது தொடா்பாக வஉசி பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வாக்கு எண்ணிக்கை மையம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
Updated on
1 min read

தூத்துக்குடியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பது தொடா்பாக வஉசி பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தூத்துக்குடி வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் தோ்தல் வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பது தொடா்பாக மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கி. செந்தில்ராஜ் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, திருச்செந்தூா், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் இருப்பு வைக்கப்படும் பாதுகாப்பு அறை மற்றும் ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளுக்கு எடுத்து செல்லுதல், முகவா்கள் வந்து செல்வதற்கான வழிகள், காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்தையும் ஆட்சியா் கி. செந்தில்ராஜ் நேரடியாகா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், வாக்கு எண்ணிக்கை மையம் தொடா்பாக வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள வசதிகள் மற்றும் ஆய்வு விவரங்கள் தோ்தல் ஆணையத்துக்கு அனுமதி அனுப்பப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்க ஒப்புதல் பெறப்படும் என்றாா்.

ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) விஷ்ணுசந்திரன், சாா் ஆட்சியா் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், மாவட்ட வழங்கல் அலுவலா் அபுல்காசிம், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் வெள்ளைச்சாமி, வட்டாட்சியா் ஜஸ்டின் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com