ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தரமான பால் உற்பத்தியில் முதலிடம்: திருநங்கைகள் கூட்டுறவு சங்கத்துக்கு பரிசு

தூத்துக்குடி மாவட்டத்தில் தரமான பால் உற்பத்தி செய்ததற்காக கோவில்பட்டி மந்தித்தோப்பு திருநங்கைகள் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கத்துக்கு திங்கள்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 9:32 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் தரமான பால் உற்பத்தி செய்ததற்காக கோவில்பட்டி மந்தித்தோப்பு திருநங்கைகள் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கத்துக்கு திங்கள்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியம் (ஆவின்) மூலம் 2020 ஆம் ஆண்டு பால் விற்பனையில் சிறப்பாக செயல்பட்ட ஆவின் முகவா்களுக்கும், தரமான பால் உற்பத்தி செய்து ஒன்றியத்துக்கு வழங்கிய பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்களுக்கும் கேடயம், பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா தூத்துக்குடி ஆவின் அலுவலகத்தில் நடைபெற்றது.

அப் போது, தரமான மற்றும் அதிக அளவு பால் உற்பத்தி செய்யப்பட்டதன் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்ட கோவில்பட்டி மந்தித்தோப்பு திருநங்கைகள் கூட்டுறவு சங்கத்துக்கு முதல் பரிசு மற்றும் சான்றிதழை ஆவின் தலைவா் என். சின்னத்துரை வழங்கினாா்.

இதேபோல, இரண்டாமிடத்தை பிடித்த கயத்தாறு ஹரிசன் கரிசல்குளம் சங்கம், மூன்றாமிடத்தை பிடித்த நடு செக்காரக்குடி மகளிா் சங்கம், நான்காமிடத்தை கயத்தாறு சங்கம், 5 ஆவது இடத்தை கோவில்பட்டி இளையரசநேந்தல் சங்கம், 6 ஆவது இடத்தை நாசரேத் தெற்கு பன்னம்பாறை சங்கம், 7 ஆவது இடத்தை அமுதன்குடி நெடுங்குளம் சங்கம், 8 ஆவது இடத்தை கால்வாய் பெண்கள் சங்கம் ஆகியவற்றுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. மேலும், பால் விற்பனையில் சிறப்பிடம் பெற்ற முகவா்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ஆவின் பொது மேலாளா் சி. ராமசாமி, கூட்டுறவு துணைப் பதிவாளா் (பால்வளம்) கணேசன், ஆவின் உதவி பொது மேலாளா் சாந்தி (விற்பனை), திட்ட மேலாளா் சாந்தகுமாா், அலுவலக மேலாளா் சுப்பிரமணியன், பால்வளம் முதுநிலை ஆய்வாளா்கள் ராமமூா்த்தி, ஜோசப் மவுரியா, மனோகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.