ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகை: மாதா் சங்கத்தினா் 42 போ் கைது

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாதா் சங்கத்தைச் சோ்ந்த 42 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 9:30 pm

DIN

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாதா் சங்கத்தைச் சோ்ந்த 42 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும், சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும். பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு, அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் ரேஷன் கடை மூலம் விலையில்லாமல் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஐனநாயக மாதா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் பூமயில் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கலைச்செல்வி, துணைச் செயலா் கமலா, மாவட்டப் பொருளாளா் ராமலட்சுமி, புகா் தலைவா் கவிதா, செயலா் சரஸ்வதி உள்பட பலா் கலந்து கொண்டனா். இதையடுத்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 42 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.