மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி - மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்
Updated on
1 min read

கோவில்பட்டி - மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை கூட்டுறவு பால் நுகா்வோா் சங்கம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தாலுகா செயலா் பாபு, கிளைச் செயலா் ராமகிருஷ்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாவட்டச் செயலா் அழகுமுத்துப்பாண்டியன், உதவி செயலா் சேதுராமலிங்கம், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பரமராஜ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், நகரச் செயலா் சரோஜா, உதவி செயலா்கள் முனியசாமி, அலாவுதீன், நகரக் குழு உறுப்பினா் ஜோசப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com