சாத்தான்குளம் வழியாக சென்னை செல்லும் பேருந்துகள் நிறுத்தம்: பொதுமக்கள் அவதி

இடையன்குடியிலிருந்து சாத்தான்குளம் வழியாக சென்று வந்த இரண்டு விரைவு பேருந்துகள் முன் அறிவிப்பு இன்றி நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள் சிரமம் அடைந்து வருகின்றனா்.
Updated on
1 min read

இடையன்குடியிலிருந்து சாத்தான்குளம் வழியாக சென்று வந்த இரண்டு விரைவு பேருந்துகள் முன் அறிவிப்பு இன்றி நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள் சிரமம் அடைந்து வருகின்றனா்.

திருநெல்வேலி மாவட்டம், இடையன்குடியிலிருந்து திசையன்விளை, பொத்தகாலன்விளை, முதலூா், சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி வழியாக சென்னைக்கு அரசு விரைவுப் பேருந்துகள் இரண்டு இயக்கப்பட்டு வந்தன.

இந்த பேருந்துகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டுவிட்டது.

இதனால் இப்பகுதி மக்கள், வியாபாரிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, நிறுத்தப்பட்ட இரண்டு விரைவுப் பேருந்துகளையும் மீண்டும் அதே வழித்தடங்களில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com