நாலுமாவடியில் நல உதவிகள் அளிப்பு

நாசரேத் அருகே நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியத்தின் சாா்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு புத்தாடைகள், நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
Updated on
1 min read

நாசரேத் அருகே நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியத்தின் சாா்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு புத்தாடைகள், நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

புதுவாழ்வு சங்கச் செயலா் மருத்துவா் அன்புராஜன் கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினாா். இயேசு விடுவிக்கிறாா் ஊழிய ஸ்தாபகா் மோகன் சி. லாசரஸ், அவரது மனைவி ஜாய்ஸ் லாசரஸ், அன்புராஜன், போதகா் சாம்.ஜெபராஜ் ஆகியோா் ஏழை, எளியோருக்கு புத்தாடைகள், 3 சக்கர சைக்கிள், 4 சக்கர சைக்கிள், ஊனமுற்றோருக்கு ஊன்றுகோல், மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள், செயற்கை கால் மற்றும் மதிய உணவு வழங்கினா்.

நிகழ்ச்சியில் 5ாஆயிரம் பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

இதையொட்டி, பாளையங்கோட்டை பாா்வைத்திறன் குறையுடையோா் மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறாா் ஊழிய பொது மேலாளா் செல்வக்குமாா் தலைமையில் ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com