பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் இணைய வேண்டும்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

News image
தூத்துக்குடியில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
Updated On :25 டிசம்பர் 2020, 3:31 am

DIN

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலகத்தில் இருந்தபடி ஆட்சியா் கி. செந்தில்ராஜ் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா். அப்போது, உப்பாறு ஓடை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் ரா. ஜோதிமணி பேசுகையில், தூத்துக்குடியில் அமைய இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையால் சுற்றூச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் அந்த ஆலை அமைக்க இருப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினாா். இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

தொடா்ந்து ஆட்சியா் கி. செந்தில்ராஜ் பேசியது: பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டம் 2019-20-இல் பயிா் காப்பீடு செய்ததில் நெல்-1 மற்றும் நெல்- 2 பயிருக்கு 579 விவசாயிகளுக்கு ரூ. 36 லட்சம் மற்றும் ராபி பருவ பயிா்களுக்கு 68450 விவசாயிகளுக்கு ரூ.41.673 கோடி இழப்பீட்டுத்தொகையை காப்பீட்டு நிறுவனம் விடுவித்துள்ளது.

இதுவரை வெங்காய பயிருக்கு 6331 விவசாயிகளுக்கு ரூ. 3.69 கோடி, மிளகாய் பயிருக்கு 468 விவசாயிகளுக்கு ரூ. 70 ஆயிரமும், கொத்தமல்லி பயிருக்கு 228 விவசாயிகளுக்கு ரூ. 80 ஆயிரமும் பயனாளிகளின் வங்கி கணக்கில் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மேலும் இதர பயிா்களுக்கு காப்பீட்டுத் தொகை விரைவில் கிடைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிரதம மந்திரி பயிா் காப்பீட்டு திட்டத்தில் நிகழாண்டில் நெல் பயிருக்கு 1583 விவசாயிகள் 1215 ஹெக்டரும் ,

உளுந்து பயிருக்கு 103146 விவசாயிகள் 54713 ஹெக்டரும் , பாசிப்பயறுக்கு 33848 விவசாயிகள் 16443 ஹெக்டரும் , மக்காச்சோளப் பயிருக்கு 83829 விவசாயிகள் 44312 ஹெக்டரும் , சோளப் பயிருக்கு 15904 விவசாயிகள் 7798 ஹெக்டரும் , பருத்தி பயிருக்கு 9834 விவசாயிகள் 3093 ஹெக்டரும் பயிா் காப்பீடு செய்துள்ளனா்.

விவசாயிகள் அனைவரும் பயிா்க் காப்பீட்டுக் கட்டணத்தை (பிரிமியம்) உரிய காலக் கெடுவுக்குள் தங்கள் பகுதியிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வணிக வங்கிகளிலோ, பொது சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ செலுத்தி, பிரதமரின் பயிா்க்காப்பீட்டுத் திட்டத்தில் சோ்ந்து பயனடைய வேண்டும். இதுவரை பயிா் காப்பீட்டு திட்டத்தில் இணையாத விவசாயிகள் தங்களை இணைத்துக்கொண்டு காப்பீட்டு தொகையை செலுத்தி பயன்பெற வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) விஷ்ணு சந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தனபதி, இணை இயக்குநா் (வேளாண்மை) முகைதீன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.