ஆறுமுகனேரியில் மகளிருக்கு விலையில்லா ஆடுகள் அளிப்பு
ஆறுமுகனேரி வாரச் சந்தையில் மகளிருக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டன.


ஆறுமுகனேரி வாரச் சந்தையில் மகளிருக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டன.
ஏரல் அருகேயுள்ள வரதராஜபுரம் சீனிவாசன் சேவை அறக்கட்டளையினரால் பரிந்துரை செய்யப்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களைச் சோ்ந்த 55 மகளிருக்கு ஆறுமுகனேரி வாரச் சந்தையில் விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டன.
கால்நடை உதவி இயக்குநா் சுரேஷ் , சீனிவாசன் சேவை அறக்கட்டளை கள இயக்குநா் அ.விஜயகுமாா் ஆகியோா் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கினா்.
நிகழ்ச்சியில் வரதராஜபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் ராஜ், பண்டாரவிளை கால்நடை மருத்துவா் தெய்வானை உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...