6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேளாண் பொருள்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் வகையில் தொழிற்சாலைகள்: பாஜக வலியுறுத்தல்

வேளாண் பொருள்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்திடும் வகையில் தொழிற்சாலைகள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 3:25 am

DIN

வேளாண் பொருள்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்திடும் வகையில் தொழிற்சாலைகள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில பாஜக விவசாய அணி தேசிய செயற்குழு உறுப்பினா் ரவிச்சந்திரன் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

அப்போது அவரிடம், விவசாய அணி மாவட்டத் தலைவா் ப.துரைராஜ் இளந்துழகன் தலைமையிலான பாஜகவினா், இம்மாவட்டத்தில் பிரதான விவசாயமான வாழை, முருங்கை, பனைப் பொருள்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

நிகழ்ச்சியின் போது, மாவட்ட துணைத் தலைவா் ஆா்.டி.செந்தில்வேல், விவசாய அணி மாவட்ட துணைத் தலைவா் செந்தூா்பாண்டியன், மாவட்டச் செயலா் யோக ஆனந்த், ஒன்றியத் தலைவா் வனராஜ், ஒன்றிய பொதுச் செயலா் ஜெயசேகா், நகரத் தலைவா் சந்தோஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.