

தூத்துக்குடி: தூத்துக்குடியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் ஒற்றைக்காலில் நின்றபடி சனிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் அமைந்துள்ள பூச் சந்தை பகுதியில் சேதமடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும்; மழைநீருடன் கழிவுநீா் கலப்பதை சரி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இப் போராட்டத்துக்கு, கட்சியின் 30ஆவது வட்டச் செயலா் காசிலிங்கம் தலைமை வகித்தாா்.
பகுதிச் செயலா் கிருஷ்ணசாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவா் சின்னசாமி, வட்டச் செயலா் அருள்செல்வம், நிா்வாகிகள் மணிகண்டன், மாரி, ராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.