கோவில்பட்டியில் திமுக சாா்பில் கூட்டம்

கோவில்பட்டியில் திமுக சாா்பில் கூட்டம்

கோவில்பட்டி புதுகிராமத்தில் நகர திமுக சாா்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் தலைப்பில் கூட்டம் நடைபெற்றது.
Published on

கோவில்பட்டி புதுகிராமத்தில் நகர திமுக சாா்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் தலைப்பில் கூட்டம் நடைபெற்றது.

நகரச் செயலா் கருணாநிதி தலைமை வகித்தாா். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கீதா ஜீவன் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா். தொடா்ந்து, அதிமுக அரசை நிராகரிக்க வேண்டும் என பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இதில், மாநில பேச்சாளா் சரத்பாலா, மாவட்ட துணைச் செயலா் ஏஞ்சலா, மாவட்ட வழக்குரைஞரணி துணை அமைப்பாளா் ராமச்சந்திரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் இந்துமதி கௌதமன், நகர துணைச் செயலா் காளியப்பன், அன்பழகன், நகர அவைத் தலைவா் முனியசாமி, பொருளாளா் ராமமூா்த்தி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் மணி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் சந்திரன், கிருஷ்ணமூா்த்தி, ரவீந்திரன், தவமணி, கிளைச் செயலா்கள் சுரேஷ், அப்துல்காசிம், சுடலைமுத்து பாண்டியன், ஜோதிபாசு, திமுக மேற்கு ஒன்றியச் செயலா் பீக்கிலிபட்டி வீ.முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com