ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தூத்துக்குடியில் திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை

திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினா் திங்கள்கிழமை தூத்துக்குடியில் பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று ஆலோசனை மேற்கொண்டனா்.

News image
திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிா்வாகிகள்.
Updated On :28 டிசம்பர் 2020, 8:37 pm

DIN

திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினா் திங்கள்கிழமை தூத்துக்குடியில் பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று ஆலோசனை மேற்கொண்டனா்.

திமுக பொருளாளா் டி.ஆா் . பாலுவை தலைவராகக் கொண்ட தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினா் தூத்துக்குடி மாவட்டத்துக்கு திங்கள்கிழமை வந்தனா்.

அந்தக் குழுவில் மாநிலங்களவை உறுப்பினா்கள் திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன், தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி ஆகியோா் இடம்பெற்றிருந்தனா்.

அந்தக் குழுவிடம் அகில இந்திய வா்த்தக தொழிற்சங்க நிா்வாகிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிா்வாகிகள், தமிழ்நாடு சைவ வேளாளா் சங்க நிா்வாகிகள், உழைக்கும் பெண்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள், தூத்துக்குடி மாவட்ட சலவைத் தொழிலாளா் சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனா்.

இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், சண்முகையா, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, இளைஞரணி துணைச் செயலா் எஸ். ஜோயல், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.