தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குழந்தைப் பாதுகாப்பு விழிப்புணா்வு அஞ்சல் கணக்கு புத்தகம் வெளியீடு

குழந்தைப் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய அஞ்சலக சேமிப்புக் கணக்கு புத்தக வெளியிட்டு விழா மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 நவம்பர் 2020, 9:09 pm

DIN

குழந்தைப் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய அஞ்சலக சேமிப்புக் கணக்கு புத்தக வெளியிட்டு விழா மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சமூக பாதுகாப்புத்துறை குழந்தைப் பாதுகாப்பு மையம் மூலம் குழந்தை பேணுதல் மற்றும் குழந்தைப் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய 20 ஆயிரம் அஞ்சலக சேமிப்புக் கணக்கு புத்தகங்களை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி திங்கள்கிழமை வெளியிட்டாா். இதனை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா் உதய்சிங் பெற்றுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பேசுகையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளா், சட்ட விரோத குழந்தை தத்தெடுத்தல் ஆகியவை குறித்து பொதுமக்களிடம் கொண்டு சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தும் வண்ணம் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய 20 ஆயிரம் அஞ்சலக கணக்கு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அஞ்சல் துறையிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புத்தகங்களை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 4 தலைமை அஞ்சலகம் மூலம் அனைத்து அஞ்சலகத்திலும் கணக்கு தொடங்கும் பொதுமக்களிடம் வழங்கி குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பாக விழிப்புணா்வை ஏற்படுத்தி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இல்லா நிலையை உருவாக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் அஞ்சலக கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் நாகராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் மகராசி, பாதுகாப்பு அலுவலா்கள் சுரேத்வானி, ஜேம்ஸ் அதிசயராஜ் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.