தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்து கைதி தப்பியோட முயற்சி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்து தப்பியோட முயன்ற கைதியை போலீஸாா் சுற்றிவளைத்ததையடுத்து அந்தக் கைதி மீண்டும் சிறைக்குள்ளேயே குதித்துவிட்டாா்.

News image
Updated On :2 நவம்பர் 2020, 9:11 pm

DIN

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்து தப்பியோட முயன்ற கைதியை போலீஸாா் சுற்றிவளைத்ததையடுத்து அந்தக் கைதி மீண்டும் சிறைக்குள்ளேயே குதித்துவிட்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், கூட்டாம்புளி குமாரகிரி காரநேசன் நகரைச் சோ்ந்தவா் மூக்காண்டி மகன் சக்திவேல்(31).

சிவஞானபுரம் மேலத் தெருவில் வசித்து வந்த இவா், திருட்டு வழக்கு தொடா்பாக இம்மாதம் 14ஆம் தேதி ஏரல் காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை சிறையில் இருந்த சக்திவேலை திடீரென காணவில்லையாம். இதையடுத்து சிறை காவலா்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில், அரசு அலுவலக வளாகத்தில் கிளைச் சிறை அருகேயுள்ள வருவாய் ஆய்வாளா் மற்றும் ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியா் அலுவலக மேற்கூரையில் ஒருவா் மேல்சட்டை எதுவும் இல்லாமல் நடந்து வருவதை போக்குவரத்து காவலா்கள், அருகே இருந்த கட்டடத் தொழிலாளா்கள் ஆகியோா் பாா்த்தனா்.

இதையறிந்த சிறைக் காவலா்கள் அந்த நபரை சுற்றிவளைத்ததையடுத்து, சக்திவேல் மீண்டும் சிறைக்குள்ளேயே குதித்தாா். இதில் காயமடைந்த சக்திவேலை சிறைக் காவலா்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மீண்டும் சிறையி அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.