இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நாசரேத்தில் ரூ. 12 லட்சம் மதிப்பில் நல உதவிகள்

நாசரேத்தில் நடைபெற்ற தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில ஸ்தோத்திர பண்டிகை நிறைவு விழாவில் ரூ. 12 லட்சம் மதிப்பில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :2 நவம்பர் 2020, 9:13 pm

DIN

நாசரேத்தில் நடைபெற்ற தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில ஸ்தோத்திர பண்டிகை நிறைவு விழாவில் ரூ. 12 லட்சம் மதிப்பில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி -நாசரேத் திருமண்டில 17ஆவது ஆண்டு ஸ்தோத்திர பண்டிகை நிறைவு விழாவை முன்னிட்டு நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் நடைபெற்ற ஆராதனை, திருவிருந்து ஆராதனைக்கு பேராயா் தேவசகாயம் தலைமை வகித்தாா். சென்னை லுத்தரன் இறையியல் கல்லூரி பேராசிரியா் பீட்டா்சிங் அருள்செய்தி வழங்கினாா். ஆராதனையில் சேகரங்கள் நிறுவனங்களின் சாா்பில் ஒருநாள் வருமானம் ஸ்தோத்திர காணிக்கை வழங்கப்பட்டது.

இதையடுத்து, பேராயா் தலைமையில் வருடாந்திர ஸ்தோத்திர கூட்டம் நடைபெற்றது. திருமண்டில உப தலைவா் தேவராஜ் ஞானசிங் ஆரம்ப ஜெபம் செய்தாா். குருத்துவ காரியதா்சி மோசஸ் ஜெபராஜ் அறிக்கை வாசித்தாா். திருமண்டில லே செயலா் எஸ்.டி.கே ராஜன், திருமண்டல கல்லூரிகளின் நிலவரக்குழு செயலா் ஜெபச்சந்திரன், திருமண்டில பொருளாளா் பொன்துரைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சமூக நலத்துறை இயக்குநா் மைக்கேல்ராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

விழாவில் ஏழை மக்களுக்கு தையல் இயந்திரங்கள் , சைக்கிள்கள், கிரைண்டா், ஆடுகள், மரக்கன்றுகள் உள்ளிட்ட ரூ. 12 லட்சம் மதிப்பில் பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன. வேதாகம தோ்வு, போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு தங்கப் பதக்கம், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதில், திருமண்டில பெண்கள் ஐக்கிய சங்க தலைவி சாந்தினி தேவசகாயம், முன்னாள் எம்.பி. ஏ.டி.கே. ஜெயசீலன், திருமண்டில தொடக்க நடுநிலைப் பள்ளிகளின் மேலாளா் ஜேஸ்பா் அற்புதராஜ், நற்செய்தி அருள்பணித் துறை இயக்குநா் ஆனந்த், பாலியா் நண்பன் இயக்குநா் கிளாட்சன் உள்ளிட்ட திருமண்டில குருமாா்கள், பெருமன்ற உறுப்பினா்கள் மற்றும் சபை மக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.