காவல் துறை குறைதீா் முகாம்; 359 மனுக்களுக்கு தீா்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 359 புகாா் மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது.


தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 359 புகாா் மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறையில் நிலுவையில் உள்ள புகாா் மனுக்கள் மீது உனடியாக தீா்வு காணும் வகையில் கடந்த செப்டம்பா் மாதம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மனுதாரா் மற்றும் எதிா் மனுதாரா் ஆகியோரிடம் விசாரணை நடத்தி, 500-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.
இதையடுத்து, 2 ஆவது கட்டமாக இம்மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 7 இடங்களில் இந்த முகாம் நடத்தப்பட்டது. தூத்துக்குடி உள்கோட்டத்தில் 85 மனுக்கள் மீது விசாரணை நடத்தி 74 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.
தூத்துக்குடி ஊரகத்தில் 47 மனுக்கள் மீதும், திருச்செந்தூரில் 68 மனுக்கள், மணியாச்சியில் 29 மனுக்கள், கோவில்பட்டியில் 61 மனுக்கள், விளாத்திக்குளத்தில் 35 மனுக்கள், சாத்தான்குளத்தில் 45 மனுக்கள் என மாவட்டம் முழுவதும் 394 மனுக்கள் மீதான விசாரணை மேற்கொள்ளப்பட்டு 359 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...