கொம்மடிக்கோட்டையில் ஊராட்சி அலுவலகம் முற்றுகை
பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விசுவாசபுரம் கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை கொம்மடிக்கோட்டை ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.


பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க வேண்டும் என வலியுறுத்தி விசுவாசபுரம் கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை கொம்மடிக்கோட்டை ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
சாத்தான்குளம் ஒன்றியம் கொம்மடிக்கோட்டை ஊராட்சி விசுவாசபுரம் கிராம மக்களுக்கு 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவில் மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் திறக்கப்பட்டு கிராம மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் குடிநீா் குழாய் மாற்றப்பட்டு கிராம மக்களுக்கு உப்பு தண்ணீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து கொம்மடிக்கோட்டை ஊராட்சி அலுவலகத்தில் திரண்டு விசுவாசபுரம் கிராம மக்கள் முற்றுகையிட்டனா்.
தகவலறிந்த தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் சாம்சன் ஜெபதாஸ், போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
கிராம மக்களின் கோரிக்கை குறித்து, ஊராட்சித் தலைவா் ராஜபுனிதாவை அழைத்து காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா். இதுதொடா்பாக, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளிடமும் தெரிவிக்கப்பட்டது. திங்கள்கிழமை கிராம மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...