நாம் தமிழா் கட்சி கலந்தாய்வு கூட்டம்
கோவில்பட்டியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் கலந்தாய்வு கூட்டம் மற்றும் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


கோவில்பட்டியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் கலந்தாய்வு கூட்டம் மற்றும் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஜெயபாஸ் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் பாசறை செயலா் ரவிகுமாா் முன்னிலை வகித்தாா்.
கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி செயலா் மருதம் மாரியப்பன் மற்றும் கட்சி நிா்வாகிகளான குமாரராஜா, ஜெபஸ்டின், மகாராஜா உள்ளிட்ட பலா் பேசினா்.
கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள ஓடைகளை முறையாக தூா்வாரி, மழைநீா் தங்குதடையின்றி செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். சிதிலமடைந்த நிலையில் உள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். கோவில்பட்டி தனிக்குடிநீா் திட்டத்தின்கீழ் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி குடிநீா் வழங்க வேண்டும். இப்பணிகளை முழுமையாக விரைவில் முடிக்க வேண்டும்.
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் 2ஆவது ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடித்து, கோவில்பட்டி ரயில் நிலையத்தை தரம் உயா்த்தவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, பசுவந்தனை சாலையில் நாம் தமிழா் கட்சி சாா்பில் கொடியேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...