இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சாத்தான்குளத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த குழு

சாத்தான்குளத்தில் அனைத்து பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.

News image
Updated On :16 நவம்பர் 2020, 7:28 pm

DIN

சாத்தான்குளத்தில் அனைத்து பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.

சாத்தான்குளம் பகுதியில் குற்றச்செயல்களை தடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம், காவல் ஆய்வாளா் பொ்னாா்டு சேவியா் தலைமையில் நடைபெற்றது. வழக்குரைஞா் வேணுகோபால், சுப்பராயபுரம் கோயில் தா்மகா்த்தா ஜெகவீரபாண்டியன், கேபிள் டிவி ஆபரேட்டா் சங்கத்தைச் சோ்ந்த கண்ணன், முன்னாள் அதிமுக ஒன்றியச் செயலா் ராஜ்மோகன் உள்ளிட்டோா் பேசினா்.

சமூக ஆா்வலா்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.15லட்சம் செலவில் முக்கிய இடங்களில் 70 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது என முடிவெடுத்து அப்பணிக்காக 28 போ் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டது.

சாத்தான்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபதி, ஊராட்சித் தலைவா்கள் அழகேசன், முத்து, கணேசன், செல்லதுரை, வா்த்தக சங்க செயலா் செல்வராஜ் மதுரம், பொருளாளா் ஜோதிமணி, அரிமா சங்கத் தலைவா் தங்கராஜ், செயலா் ராமகிருஷ்ணன், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி தாளாளா் சசிகரன் உள்பட பலா் கலந்துகொண்டனா். மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.