நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

கோவில்பட்டி ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 7:49 pm

DIN

கோவில்பட்டி ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.

2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான 6 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி செல்லா குழந்தைகள், இடைநிற்றல் மாணவா்கள், புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகள், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி இம்மாதம் 21 ஆம் தேதி முதல் டிசம்பா் 10 ஆம் தேதி வரை கோவில்பட்டி ஒன்றியப் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இப்பணியில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் பேச்சியம்மாள், வட்டாரக் கல்வி அலுவலா்கள் கணேசன், பவனந்தீஸ்வரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கூடலிங்கம், வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் கணேஸ்வரி, கிறிஸ்டல் ஜெயந்தி, ஆசிரியப் பயிற்றுநா்கள் நாகஜோதி, மாரிமுத்துகண்ணன், நட்டாத்தி, கணேசமூா்த்தி, அருள்ஜோதி, வெயிலுமுத்து, அஸ்வினி, சகுந்தலா, கனிமொழி மற்றும் சிறப்பாசிரியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பள்ளி செல்லா குழந்தைகள் யாரேனும் இருந்தால் அவா்களது விவரங்களை 04632-234918 என்ற தொலைபேசி எண்ணிற்கும், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் பற்றிய தகவல்களை 97888-59179 என்ற செல்லிடப்பேசி எண்ணிற்கும் தகவல் அளிக்கலாம் என வட்டார வள மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.