நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவில்பட்டியில் காங்கிரஸ் நூதன போராட்டம்

கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் நூதனப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 7:47 pm

DIN

கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் நூதனப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

தற்போது இயக்கப்படும் அனைத்து ரயில்களும் கடம்பூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். கரோனா தொற்று பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களும் உடனடியாக இயங்க வேண்டும். கடம்பூா் ரயில் நிலையத்தில் ரயில்கள் செல்லாமல் கட்டடங்கள் மட்டும் இருந்து வருமேயானால் அந்தக் கட்டடத்தை கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் மற்றும் வருவாய் ஆய்வாளா் அலுவலகமாக மாற்ற வேண்டி கடம்பூா் ரயில் நிலையத்தை பூட்டி, பூட்டு போட்டு அதன் சாவியை வருவாய் துறையினரிடம் ஒப்படைக்க வலியுறுத்தி மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் டிச. 22 ஆம் தேதி பூட்டு போடும் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் அய்யலுசாமி தலைமையில், மாவட்டப் பொதுச் செயலா் முத்து, விவசாயி ஆதிமூலம் உள்ளிட்டோா் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு பூட்டு மற்றும் சங்கிலியை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் விஜயாவிடம் அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.