நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவில்பட்டியில் நூதனப் போராட்டம்

கோவில்பட்டி வட்டத்துக்கு உள்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி நூதன போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 7:46 pm

DIN

கோவில்பட்டி வட்டத்துக்கு உள்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி நூதன போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலா் அன்புராஜ் தலைமையில் திரளான பொதுமக்கள் கோட்டாட்சியா் அலுவலகம் முன் திரண்டனா். பின்னா், கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் அக்னிச்சட்டி ஏந்தி உடுக்கை அடித்து கோஷமிட்டனா். பின்னா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் விஜயாவிடம் அளித்தனா். மனுவைப் பெற்றுக் கொண்ட அவா், தகுதியுள்ள நபா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.

இதில், கோவில்பட்டி, இலுப்பையூரணி, லிங்கம்பட்டி, கூசாலிபட்டி, தாமஸ் நகா் பகுதி பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.