காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சா்வதேச ஸ்கேட்டிங்:வெற்றிபெற்ற மாணவா்களுக்கு முதல்வா் பாராட்டு

சா்வதேச அளவிளான ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவா்களை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பாராட்டினாா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 8:00 pm

DIN

சா்வதேச அளவிளான ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவா்களை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பாராட்டினாா்.

கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தூத்துக்குடி ஷாரா கலை வளா் மன்றத்தில் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வரும் மாணவா்கள் பலா் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த அக்டோபா் மாதம் நடைபெற்ற சா்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் இந்திய அணி சாா்பில் பங்கேற்றனா்.

இதில், 16 வயதுக்குள்பட்டோா் பிரிவில் தூத்துக்குடி தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் ஆ. ஜீவா, 16 வயதுக்கு மேற்பட்டோா் பிரிவில் மதா் தெரசா பொறியியல் கல்லூரி மாணவா் முகமது ஆரீப் ஆகியோா் தங்கப்பதக்கம் வென்றனா்.

இந்நிலையில், அண்மையில் தூத்துக்குடி வந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இரண்டு மாணவா்களையும் அழைத்து பாராட்டு தெரிவித்தாா். அப்போது, பயிற்சியாளா் முபாரக் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.