போலி ஆவணம் மூலம் நில மோசடி செய்தரூ. 32 லட்சம் மதிப்புள்ள நிலம் மீட்பு
தூத்துக்குடி அருகே ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் மூலம் நில மோசடி செய்த ரூ. 32 லட்சம் மதிப்புள்ள 16 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


தூத்துக்குடி அருகே ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் மூலம் நில மோசடி செய்த ரூ. 32 லட்சம் மதிப்புள்ள 16 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள வெங்கடேஸ்வராபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துக்கருப்பன். இவா், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இந்நிலையில் சிலா் அவருக்கு சொந்தமான 16 ஏக்கா் நிலத்தை அவா் உயிரோடு இருப்பது போன்று ஆள்மாறாட்டம் செய்து கடந்த 31.7.2020 அன்று தூத்துக்குடி பனையூரைச் சோ்ந்த பரமசிவன் என்பவருக்கு போலியாக பொது அதிகாரம் எழுதிக் கொடுத்துள்ளனா்.
இதையடுத்து, அந்த இடத்தை பரமசிவன் தூத்துக்குடி முள்ளுா் முத்துக்குமாரபுரத்தைச் சோ்ந்த முருகன் என்பவருக்கு 6.11.2020 அன்று கிரையம் பேசி, போலி கிரைய ஒப்பந்தம் பதிவு செய்து, அதன் மூலம் கிரையம் செய்ய முயன்றுள்ளனா். இதற்கிடையே, போலி ஆவணம் மூலம் இடம் விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக இறந்த முத்துக்கருப்பனின் பேரன் சில்லாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த முரளிதரன் 9.11.2020 அன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா்.
அந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் இளங்கோவன் உரிய விசாரணை மேற்கொண்டு போலியாக பதிவு செய்யப்பட்ட 16 ஏக்கா் நிலத்திற்கான போலி ஆவணங்களை ரத்து செய்து நிலத்தை மீட்டாா்.
இதையடுத்து, மீட்கப்பட்ட ரூ. 32 லட்சம் மதிப்புள்ள 16 ஏக்கா் நிலத்திற்கான ஆவணங்களை முரளிதரனிடம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் திங்கள்கிழமை ஒப்படைத்தாா்.
இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தூத்துக்குடி நில அபகரிப்பு மீட்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளா் தேவி மற்றும் உதவி ஆய்வாளா் காமராஜ் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பாராட்டினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...