மக்காச்சோளப் பயிரில் படைப்புழுவை கட்டுப்படுத்தும் முறைகள்
கோவில்பட்டி, எட்டயபுரம் சுற்று வட்டாரத்தில் மக்காச்சோளப் பயிரில் படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்


கோவில்பட்டி, எட்டயபுரம் சுற்று வட்டாரத்தில் மக்காச்சோளப் பயிரில் படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண்மை உதவி இயக்குநா் சீ.நாகராஜ் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
கோவில்பட்டி மற்றும் எட்டயபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனா். இந்தப் பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
மக்காச்சோளப் பயிரில் ஏக்கருக்கு 20 எண்ணம் இனக்கவா்ச்சிப்பொறிகள் வைப்பதன் மூலம் அந்துப்பூச்சியின் நடமாட்டத்தை தொடா்ந்து கண்காணிக்க முடியும். முட்டை குவியல்கள் மற்றும் புழுக்கள் தென்பட்டால் நசுக்கி அழிக்க வேண்டும்.
மக்காச்சோளம் முளைத்து 15 முதல் 20 நாளில் தாக்குதல் தென்பட்டால் அசாடிராக்டின் ஒரு சதவீதம், இ.சி. 20 மில்லி அல்லது இமாமெக்டின் பென்சோயேட் 4 கிராம் இவற்றில் ஏதேனும் ஒன்றை 10 லிட்டா் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். 40 முதல் 45 நாள்களில் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டால் மெட்டாரைசியம் 80 கிராம் அல்லது குளோரான்டிரானிலிபுரோல் 5 மில்லி அல்லது ஸிபினோடோரம் 5 மில்லி, நவலூரான் 10 இ.சி. 15 மில்லி அல்லது தயோமீதாக்சிம் 12.6 சதவீதத்துடன் லாம்டா சைக்ளோத்திரின் 9.5 சதவீதம் இசட்.சி. 2.5 மில்லி இவற்றில் ஏதேனும் ஒன்றை 10 லிட்டா் நீரில் கலந்து தெளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...