நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆன்-லைன் விளையாட்டுகளைதவிா்க்க காவல் துறை வேண்டுகோள்

ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டுகளை தவிா்க்க, தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 8:02 pm

DIN

ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டுகளை தவிா்க்க, தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நவீன தொழில்நுட்பத்தின் வளா்ச்சியை சிலா் தவறாக பயன்படுத்தி, ஆன்-லைன் சூதாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனா். இதன் விளைவாக பல தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதுபோன்ற விளையாட்டுகளை பெற்றோா்கள் விளையாடினாலும், குழந்தைகள் விளையாடினாலும் இழப்பு குடும்பத்திற்குத்தான் என்பதை உணர வேண்டும்.

எனவே, இதுபோன்ற விளையாட்டுகளை பொதுமக்கள் விளையாடவேண்டாம். மேலும் குழந்தைகளையும் செல்லிடப்பேசிகளில் விளையாட அனுமதிக்க வேண்டாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.