பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

'திருச்செந்தூரில் கார்த்திகை தீபத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை'

திருச்செந்தூரில் கார்த்திகை தீபத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

News image
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்.
Updated On :28 நவம்பர் 2020, 11:42 am

DIN

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (நவ. 29) திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கடற்கரையில் நடைபெறும்  சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 கார்த்திகை தீபத் திருநாளில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் வைத்து இரவு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி வழக்கமாக நடைபெறும். 
ஆனால் கரோனோ பொது முடக்கத்தால் கடற்கரையில் வைத்து (நவ.29) ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு இவ்வாண்டு அனுமதிக் கிடையாது. ஆனால் திருக்கோயிலில் காலை முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் இணைய முன்பதிவு மற்றும் நேரடி தரிசனம் செய்யலாம் எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.