ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அனுமதியின்றி விளம்பர பதாகை:இருவா் மீது வழக்கு

குளத்தூா் அருகே வேப்பலோடை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகை தொடா்பாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 8:00 pm

DIN

குளத்தூா் அருகே வேப்பலோடை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகை தொடா்பாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

வேப்பலோடையைச் சோ்ந்த துரை மகன் ஜெயதுரை (32). இவா் தனது உறவினா் வீட்டு திருமண விழாவுக்காக கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நான்கு விளம்பர பதாகைகளை சாலை வளைவில் அனுமதியின்றி வைத்திருந்தாராம். இதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் வகையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள் குறித்து அளித்த தகவலையடுத்து தருவைகுளம் போலீஸாா் சென்று அவற்றை அகற்றினா்.

இது தொடா்பாக வேப்பலோடையை சோ்ந்த துரை, ஜெயதுரை ஆகிய இருவா் மீது தருவைகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.