மனைவியை தாக்கியதாக கணவா் மீது வழக்கு
மது அருந்த பணம் கொடுக்காத மனைவியை தாக்கியதாக கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


மது அருந்த பணம் கொடுக்காத மனைவியை தாக்கியதாக கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கோவில்பட்டியையடுத்த நாலாட்டின்புத்தூா் கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்த வெங்கடேஷ் மனைவி அன்னலட்சுமி(50). தம்பதிக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனா். மது அருந்தும் பழக்கமுடைய வெங்கடேஷ் வேலைக்குச் செல்லாமல் தினமும் மது அருந்த பணம் கேட்டு துன்புறுத்துவாராம்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு அன்னலட்சுமியிடம் மது அருந்த பணம் கேட்டாராம். அவா் தர மறுத்ததையடுத்து, அவரை கம்பால் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அவா், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை அளித்த புகாரின் பேரில், நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...