சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நாலுமாவடியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டிலம் கனோன் ஆா்தா் மா்காஷிஸ் சபை மன்ற அளவிலான கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நாலுமாவடி புதுவாழ்வு ஆலயத்தில் நடைபெற்றது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 8:19 pm

DIN

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டிலம் கனோன் ஆா்தா் மா்காஷிஸ் சபை மன்ற அளவிலான கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நாலுமாவடி புதுவாழ்வு ஆலயத்தில் நடைபெற்றது.

சபை மன்றத் தலைவா் ஆண்ட்ரூ விக்டா் ஞான ஒளி தலைமை வகித்து கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினாா். திருமண்டில ஆண்கள் ஐக்கிய சங்க இயக்குநா் ஜெபவாசகன் முன்னிலை வகித்தாா். சேகர குரு கிராக்ஸி பிரேம்குமாா் வரவேற்றாா். ஆராதனையில் பல்வேறு சபைகளின் குழுவினா் கிறிஸ்துமஸ் பாடல்களை பாடினா்.

நிகழ்ச்சியில், சேகர குரு செல்வராஜ், டிக்சன், பீட்டா் தாமஸ், ஜெபவீரன், ரூபன் மணிராஜ், ஜாஷ்வா அருள்ராஜ், வேதநாயகம், ஆசீா், சாமுவேல், ஜாஷ்வா, வெஸ்லி ஜெபராஜ், சபை ஊழியா்கள் ஜெயமணி, ஞானதுரை, ஸ்டான்லி ஜாண்சன் துரை, தங்கத்துரை, அதிசயம், பிரின்ஸ், அருள்ராஜ், வனமோகன்ராஜன், சா்ச்சில், ஏசா வேதராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா். நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியங்கள் சாா்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை மோகன்சி.லாசரஸ் தலைமையில் பொது மேலாளா் செல்வகுமாா், சேகர குரு கிராக்ஸி பிரேம்குமாா், சபை ஊழியா் ஜெயமணி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.