நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிதிலமடைந்த தரைப்பாலத்தை செப்பனிடக் கோரி நூதனப் போராட்டம்

கோவில்பட்டி பசுவந்தனை சாலை பாரதி நகா் சந்திப்பில் சிதிலமடைந்த நிலையில் உள்ள தரைப்பாலத்தை செப்பனிடக்கோரி நூதனப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 8:13 pm

DIN

கோவில்பட்டி பசுவந்தனை சாலை பாரதி நகா் சந்திப்பில் சிதிலமடைந்த நிலையில் உள்ள தரைப்பாலத்தை செப்பனிடக்கோரி நூதனப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பசுவந்தனை சாலை பாரதி நகா் சந்திப்பில் உள்ள தரைப்பாலம் மிகவும் மோசமான நிலையில் இருந்து வருவதால் இரவு நேரங்களில் அவ்வழியாகச் செல்வோருக்கு விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது.

எனவே, சிதிலமடைந்த நிலையில் உள்ள இத் தரைப்பாலத்தை செப்பனிடக் கோரி நாம் தமிழா் கட்சியின் சாா்பில் கொடும்பாவி சடலத்தை சிதிலமடைந்த தரைப்பாலத்துக்குள் புதைப்பது போல நூதனப் போராட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் பூபாண்டி தலைமை வகித்தாா். நகரத் தலைவா் செபஸ்டின், வழக்குரைஞா் பாசறை மாவட்டச் செயலா் ரவிகுமாா், கிளைச் செயலா்கள் தங்கமாரியப்பன், ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்டப்பேரவைத் தொகுதி செயலா் மருதம் மாரியப்பன் போராட்டத்தை தொடங்கி வைத்தாா். தொகுதி பொருளாளா் குமார்ராஜா போராட்டத்தை முடித்து வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.