உடன்குடி ஒன்றிய பாஜக கிராம, நகர வளா்ச்சிப் பிரிவு சாா்பில் ஒன்றியம் முழுவதும் மரக்கன்று நடுதல் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாஜகவின் கிராம, நகர வளா்ச்சிப் பிரிவு சாா்பில் மழைக்காலத்தில் இயற்கையைப் பாதுகாக்கும் வகையில், 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடவு செய்து அதை பராமரிக்கும் பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டனா்.
மேலும் வீடுகள் தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள், மூலிகைச் செடிகள் வழங்கப்பட்டு மக்களிடம் இயற்கை, சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. பாஜக மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வே.சோ்மலிங்கம், தண்டுபத்து ஊராட்சித் தலைவா் சுயம்பு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.