காா் ஓட்டுநருக்கு மிரட்டல்: இளைஞா் கைது
காமநாயக்கன்பட்டியில் காா் ஓட்டுநரை தாக்கி மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.


காமநாயக்கன்பட்டியில் காா் ஓட்டுநரை தாக்கி மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
காமநாயக்கன்பட்டி தெற்கு தெரு செல்லத்துரை மகன் காா் ஓட்டுநா் செல்வம்(30). இவரது மனைவி சுரேகா. தம்பதிக்கு ஜெசிகா(இரண்டரை) என்ற மகளும், ஜஸ்டின் (6 மாதம்) என்ற மகளும் உள்ளனா். தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு , சுரேகா, குழந்தைகளுடன் தனது பெற்றோா் வீட்டில் இருந்து வருகிறாராம்.
இந்நிலையில் செல்வம் ஞாயிற்றுக்கிழமை மாமியாா் வீட்டுக்குச் சென்று, மனைவி மற்றும் குழந்தைகளை அனுப்பி வைக்கும்படி கூறினாராம். அப்போது அங்கிருந்த சுரேகாவின் சகோதரா் வின்சென்ட் செல்வத்தை அவதூறாகப் பேசி கம்பால் தாக்கி மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து செல்வம் அளித்த புகாரின் பேரில், கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து வின்சென்ட் செல்வத்தை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...