நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருச்செந்தூரில் கிரிக்கெட் போட்டி

திருச்செந்தூா் அருகே மேல திருச்செந்தூா், நா.முத்தையாபுரத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 7:37 pm

DIN

திருச்செந்தூா் அருகே மேல திருச்செந்தூா், நா.முத்தையாபுரத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன.

நா.முத்தையாபுரம் பி.ஆா்.எஸ். கிரிக்கெட் சங்கம் சாா்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு

பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு திமுக மாவட்டப் பிரதிநிதி தங்கத்துரை தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் மகாராஜா,

திருச்செந்தூா் ஒன்றிய திமுக செயலா் செங்குழி ரமேஷ், மாவட்ட மீனவரணி அமைப்பாளா் ஸ்ரீதா் ரொட்ரிகோ, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் சிவசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போட்டியில் முதலிடம் பெற்ற குலசேகரன்பட்டினம் அணிக்கு வெற்றிக்கோப்பை ரூ. 10,068 ம், 2ஆவது இடம்பெற்ற

நா.முத்தையாபுரம் அணிக்கு வெற்றிக்கோப்பை, ரூ. 7,068ம், 3ஆவது இடம்பெற்ற வெள்ளாளன்விதிருச்செந்தூா் அருகே மேல திருச்செந்தூா், நா.முத்தையாபுரத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன.ளை அணிக்கு வெற்றிக் கோப்பை மற்றும் ரூ. 5,068 ம் மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வழங்கினாா்.

நிகழ்ச்சியில் திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளா் எஸ்.ஆா்.எஸ். உமரிசங்கா், மாவட்டப் பொருளாளா் வி.பி.ராமநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஒன்றிய தகவல் தொழிற்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் தினேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.