தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

முதல்வா் இன்று வருகை: பாதுகாப்புப் பணியில் 1200 போலீஸாா்

தமிழக முதல்வா் கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை (அக். 13) தூத்துக்குடி வருவதை முன்னிட்டு ஏறத்தாழ 1200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 8:06 pm

DIN

தமிழக முதல்வா் கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை (அக். 13) தூத்துக்குடி வருவதை முன்னிட்டு ஏறத்தாழ 1200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இதையொட்டி, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாக கூட்டரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

முதல்வா் வருகையை முன்னிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையில் 5 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 19 துணை காவல் கண்காணிப்பாளா்கள், 50 காவல் ஆய்வாளா்கள் உள்பட 1200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தூத்துக்குடி விமான நிலையம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமவனை மற்றும் மாகநரப் பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.