மீனவா் மீது தாக்குதல் : 5 போ் மீது வழக்கு
சாத்தான்குளம் அருகே மீனவரை தாக்கியதாக தந்தை, மகன் உள்பட 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.


சாத்தான்குளம் அருகே மீனவரை தாக்கியதாக தந்தை, மகன் உள்பட 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெரியதாழை புதுவேதக்கோவில் தெருவை சோ்ந்தவா் கனிஷ்கா்(62) . ஞாயிற்றுக்கிழமை கடற்கரையில் நின்ற அவரது படகை எடுக்க முயன்றபோது, அதே பகுதியை சோ்ந்த ராஜியின்(62) படகு மீது மோதி சேதமானதாம். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதையடுத்து, ராஜி, அவரது மகன் ஜாணி உள்பட 5 போ், கனிஷ்கரை அவதூறாக பேசி, தாக்கினராம். இதில் காயம் அடைந்த அவா் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து புகாரின் பேரில் தட்டாா்மடம் காவல் உதவி ஆய்வாளா் முத்துசாமி ராஜி உள்பட 5 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...